கணக்குப் பிரிவின் செயற்பாடுகள்

♦ திணைக்களத்தின்  உத்தியோகபூர்வ வங்கி  கணக்கினைப்பேணிச் செல்லுதல் மற்றும் நடாத்திச் செல்லுதல்.

♦ நிதியாக மற்றும் காசோலையாக  கிடைப்பவற்றுக்கு பற்றுச்சீட்டுக்களை வழங்குதல்¸வங்கியில் இடல்  மற்றும் அதுதொடர்பான ஏடுகளைப்பே​ணிச்செல்லுதல்.

♦ திணைக்களத்தின்  எல்லா அலுவலகர்களின் மற்றும் சேவகர்களின் சம்பளங்களைத்  தயாரித்தல்,  சம்பளம் செலுத்துதல் மற்றும்  சம்பள ஏட்டினைப் பேணிச் செல்லும் நடவடிக்கை.

♦ திணைக்களத்தின் வருடாந்த வரவுசெலவுத் திட்டத்தினைத் தயாரித்தல், ஒதுக்கீட்டுக் கணக்கினைத் தயாரித்தல் , மாதாந்த கணக்கு அறிக்கை , வங்கி கணக்கிணக்கக் கூற்று தயாரித்த்தல்  அத்துடன் இற்றைப்படுத்தி பேணிச் செல்லுதல்.

♦ ஒதுக்கீட்டுக் கணக்கினை பேணிச் செல்லும் நடவடிக்கை.

♦ திணைக்களத்தின்  ஏற்பாட்டினை  விடுவித்தல், வகைமாற்றுதல் அத்துடன்  கணக்குப் பதியும் நடவடிக்கை.

♦ பிற திணைக்களங்களில் இருந்து கிடைக்கும்   ஏற்பாடுகளை செலவு செய்தல் மற்றும் பற்று அறிவித்தலின் மூலம் செலவு விடயங்களை  உரிய திணைக்களங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தல்.

♦ மாகாண அரச அலுவலகர்களின்  முற்பணக் கணக்கு  ஏடுகளை இற்றைப்படுத்திப் பேணிச்செல்லுதல்,  கட்டுபாட்டுக் கணக்கினைப் பேணிச் செல்லுதல் அத்துடன்  இணக்கம் செய்யும் நடவடிக்கை.

♦ திணைக்களம் மற்றும் அதன் கீழ் உள்ள  தாபனங்களுக்கு வருடாந்த பொருட் கணக்கெடுப்பு சபையினை நியமித்தல்  அத்துடன்  கணிப்புச் சபையின்  அறிக்கைக்கு இணங்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.

♦ கட்டுநிதிக் கணக்கினைப் பேணிச் செல்லுதல். பணமனுப்பல் கணக்கினைப் பேணிச் செல்லுதல், பிரதம செயலாளர் காரியாலயத்திற்கு பணமனுப்பல்செய்தல். , இணக்கம் செய்தல் மற்றும் உரிய அறிக்கைகளை அனுப்புதல் அத்துடன் வருடாந்த கட்டுநிதி  தகவலினைத் தயாரித்தல் மற்றும் மாதாந்த கட்டுநிதி மதிப்பீட்டினைத் தயாரித்தல்.

♦ காசேட்டினைப் பேணிச் செல்லுதல் ,காசேட்டினை எழுதுதல் மற்றும்  காசாகாத காசோலை தொடர்பாக  நடவடிக்கை எடுத்தல்.

♦ பெறுகைக் குழு மற்றும் தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழுவினை நியமித்தல்  , அந்த குழுக்களைக் கூட்டுதல் அத்துடன் பெறுகைக் குழுவின் முடிவினை  அறிவிக்கும் நடவடிக்கை.

♦ திணைக்களத்தின்தேவைக்கு  இணங்க பொருட்களை கொள்வனவு செய்வதற்காக விலை மனுவினைக் கோருதல், பெறுகை குழுவிற்கு  முன்வைத்தல்  அத்துடன் முடிவுகளுக்கு இணங்க கொள்வனவுசெய்தல்.

♦ திணைக்களத்தின்  கணக்குப் பொழிப்பினைத் தயாரித்தல்   (CIGAS)

♦ பிரதான காரியாலயத்தின் களஞ்சியத்திற்குப் பொறுப்பாக செயற்படுதல்,பொருட்களைப் பொறுப்பேற்றல் , வழங்குதல். அத்துடன்  அதற்குரிய  ஏடுகள்   மறறும்  புத்தகங்களை இற்றைப்படுத்திப்பேணிச் செல்லுதல்.

♦ கணக்கு ஏடுகளை இற்றைப்படுத்தி பேணிச் செல்லுதல்.