சேவைப் பிரிவின் செயற்பாடுகள்
♦திணைக்களத்தின் நேரடியான நிர்வாகத்தின் கீழ் காணப்படும் உறுதிப்படுத்தப்பட்ட பாடசாலைகள் , தடுப்பு இல்லங்கள் , அரசின் பொறுப்பேற்கும் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களான தாபனங்களின் செயற்பாடுகளை முழுமையாக மேற்பார்வைசெய்தல் அத்துடன் அத் தாபனங்களின் சேவைகளை தரத்தின் அடிப்படையில் அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை.
♦தொண்டர் சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் அத்துடன் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை புதிதாகப் பதிவு செய்தல், பதிவுகளைப் புதுப்பித்தல் அத்துடன் தாபனங்களை மூடிவிடுதல் போன்ற நடவடிக்கை
♦சிறுவர் அபிவிருத்தி நிலையங்களின் பிள்ளைகளை வெளியில் கொண்டுசெல்ல அங்கீகாரம் வழங்குதல் அத்துடன் பொறுப்பாளர்களுக்கு ஒப்படைப்பதற்குரிய நடவடிக்கை.
♦தாபனப்படுத்தப்பட்ட பிள்ளைகளை சமூகமயப்படுத்த உரிய நடவடிக்கை எடுத்தல்.
♦மேல் மாகாணத்தின் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் பிள்ளைகளைச் சேர்த்தல் மற்றும் மாற்றுவது தொடர்பான எல்லா நடவடிக்கையும் அத்துடன் பிள்ளைகள் தங்கியிருக்கும் காலத்தினை நீடிப்பதற்குரிய எல்லா நடவடிக்கையும்.
♦நன்நடத்தை ,பராமிப்பு கோப்புக்கள் தொடர்பான நடவடிக்கை
♦சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் தொடர்பாக மக்களிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகள், மனுக்கள் அத்துடன் நீதிமன்றத்தினால் அழைக்கப்படும் அறிக்கைகள்தொடர்பான நடவடிக்கை
♦பிள்ளைகளுக்காக நடாத்தப்படும் கலாச்சார, சமய மற்றும் பிற வைபவங்கள்,வேலைத்திட்டங்கள் அத்துடன் தொழிற்பயிற்சிப் பாடநெறிகளை நடாத்துதல் அத்துடன் இணைப்பு நடவடிக்கை.
♦அனுமதி பெறாது சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் உள்ள பின்ளைகளுக்கு திணைக்களத்தின் அங்கீகாரத்தினைப் பெறுவது தொடர்பாக நடவடிக்கை எடுத்தல்.
♦சிசுமிண மாணவ உதவி , உரிய தனிப்பட்ட உதவி நிகழ்சித்திட்டங்களை நடைமுறைப்டுத்துதல்.
♦திணைக்களத்தின் நேரடியான கட்டுப்பாட்டில் காணப்படும் தாபனங்கள் தொடர்பாக ஏதாவதுஆய்வொன்றினை செய்ய கல்விபயிலும் பிள்ளைகளுக்கு அந்த நடவடிக்கைக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குதல்.
♦பிள்ளைகளைத் தத்தெடுத்து வளர்ப்பதற்காக வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுத்தல்
♦பிள்ளைகளைத் தத்தெடுத்து வளர்பதற்காக வேண்டுகோள் விடுக்கும் விண்ணப்பதாரிகள் தொடர்பான நடவடிக்கை
♦மேல் மாகாண பிள்ளைகளின் தகவல்களைக் கோருவதற்குரிய எல்லா கடமை நடவடிக்கையும்