முக்கிய நடவடிக்கைகள்

 1. தாபனப்படுத்தப்பட்ட மற்றும் நிறுவனப்படுத்தப்பட்ட பிள்ளைகள் 5000 ற்கு மட்டும் ஆகார பானம் , கல்வி ,சுகாதாரம் உட்பட்ட உடல் மற்றும் உள  பாதுகாப்பை அமைத்தல்
 1. நீதிமன்ற உத்தரவின் கீழ் பிள்ளைகளுக்கு தற்காலிகமாக தடுப்பு மற்றும் வசதிகளை வழங்கல்.
 1. சிறுவயது தாய்மார்களின் நிலையத்தினூடாக சிறுவயது தாய்மார் 38 பேருக்கு பாதுகாப்பு அளித்தல்.
 1. அரசபொறுப்பேற்கும் இல்லங்களினூடாக 83 குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளித்தல்.
 2. பிள்ளைகள் அபிவிருத்தி நிலைய பிள்ளைகளுக்காக பல்வேறுப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் ஒழுங்கமைத்தல் மற்றும் கலாசார பாரம்பரிய விழாக்கள் நடாத்துதல் மற்றும் திறமைகளை மதிப்பீடல்
 1. தாபனப்படுத்தப்பட்ட பிள்ளைகளை பெற்றோருக்கு, உறவினருக்கு பொறுப்பானவருக்கு ஒப்படைத்தல்.
 2. சட்ட ரீதியாக பிள்ளைகளை வளர்ப்பதற்கு ஒப்படைத்தல்
 1. பிள்ளைகள் இல்லாத ஜோடிகளுகளை திணைக்களத்தில் பதிவு செய்தல், தேவையான அறிவைப் பெற்றுதரல் மற்றும் பிள்ளைகளை த்த்து கொடுப்பதற்கான நடவடிக்கை
 2. தொழிற்கல்வி மற்றும் பயிற்சி பெற்ற பிள்ளைகளுக்க சுயதொழில் உபகரணங்கள் வழங்கல்.
 1. தாபனப்படுத்தப்பட்ட பிள்ளைகளுக்கு தொழிலுக்கு அனுப்புதல்
 1. திருமணம் முடித்து வைத்தல்
 1. பிள்ளைகளின் சமூக நலனுக்காக திணைக்களத்தின் மூலம் பராமரிப்பு படி, மானியபடி, கட்டுப்பாட்டாளர்களுக்கு ஊக்கப்படி வழங்கல்
 2. பிள்ளைகள் அபிவிருத்தி நிலையம் 120 பதிவு செய்தல் மற்றும் பதிவை புதுப்பித்தல் .
 1. பிள்ளைகள் அபிவிருத்தி நிலைய தரங்களை உயர்த்தவும் நிலையத்தின் மேலாண்மையை உயர்த்தல் மற்றும் மேற்பார்வை
 1. அரச மற்றும் தன்னார்வ பிள்ளைகள் அபிவிருத்தி நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி
 2. ரன்முதுகல மாகொல தடுப்பு இல்லம் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட பாடசாலைகளில் பிள்ளைகள் அபிவிருத்தி நிலையங்களில் பிள்ளைகளுக்கு உசிதமான நட்புறவான சூழலை அமைத்தல்
 3. குழந்தை குற்றவாளிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக தகவல் பெற்றுக் கொள்வதற்கு 24 மணித்தியாலயம் செயற்படும் தொலைபேசி இலக்கம் 0112078351 விசேட நன்னடத்தை பிரிவு செயற்படுத்தல்
 1. அறிக்கை 3052 ​ மட்டும் நீதிமன்றத்திற்கு வழங்கி  நீதிதுறைக்கு உதவுதல் மற்றும் நீதிமன்றத்திற்கு   செல்லுதல்
 2. மாகாணத்தில் உள்ள தாபனப்படுத்தப்படும் ஆபத்து உள்ள குறைந்த வருமானம் பெறும் 4500 குடும்பத்தில் உள்ள பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கல் .
 1. பிள்ளைகள் தாபனப்படுத்தப்படும் ஆபத்து உள்ள குடும்ப  பிள்ளைகள் 1171 பேருக்கு சிசுமிண புலமை பரிசில் வழங்கல் .
 1. பிள்ளைகள் தாபனப்படுத்தப்படும் ஆபத்து உள்ள குடும்பங்களின் பெற்றோர்களுக்கு வருமானத்தை அதிகரிப்பதற்கு சுயதொழில் உபகரணங்கள் வழங்கல்.
 1. உரிய தனிநபர் பொறுப்பின் ஊடாக, கண்காணிப்பின் கீழ் நன்னடத்தை உத்தரவின் கீழ் பிள்ளைகள் மற்றும் முதியோர்கள் 198 பேரை சமூகத்தினுள்  வைத்துப் பாதுகாத்தல்.
 1. சிறுவர்கள் முறைகேடு மற்றும் போதைப் பொருள் பாவனையினால் பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்பினைக் குறைக்க சமூகத்தினை அறிவுறுத்துதல்.
 1. குடும்ப பிரச்சினைகள் 211 தீர்த்து வைத்தல்.
 1. சேவையாளர்கள் சமூக நலன் மற்றும் உத்தியோகத்தர் பயிற்சி அளித்தல்.
 1. கணனி தரவு தளமொன்றை கொண்டு நடாத்துதல் மற்றும் தலைமை அலுவலகத்தில் பிள்ளைகளின் சுய விபர கோவைகள் பராமரித்தல்
 2. திணைக்கள இணைய வலைத்தளத்தை புதுப்பித்தல்
 1. நாள் பராமரிப்பு மையங்கள் 30 மேற்பார்வை மற்றும் உதவி வழங்கல்
 2. பிள்ளைகள் அபிவிருத்தி நிலையம் தொடர்பாக சட்டத் திட்டங்களை தயாரித்தல்
 1. நிறுவனத் தலைவர் கூட்டம் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் கூட்டம் மேலாண்மை வாரிய கூட்டம், பிள்ளைகள் த்து கொடுத்த்ல தொடர்பான கூட்டம் மற்றும் தள குழு போன்ற கூட்டங்கள் நடாத்துதல்