முகவரி
பெண்கள் உறுதிப்படுத்தப்பட்ட பாடசாலை,
ரம்முதுகல,
கடவத.
1939 ஆம் ஆண்டின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான கட்டளை சட்டஇலக்கம். 48 இன் பிரிவு 51 ஆம் பிரிவின் பிரகாரம் நிறுவப்பட்டது இந்த பாடசாலை நன்னடத்தை மற்றும் சிறுவர்பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் கீழ்நிர்வகிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. நீதிமன்ற கட்டளைப்படி சட்டத்திற்கு முரணான 12-16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் புனர்வாழ்விற்காக இந்தப் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள்.
இந்த குழந்தைகள் 3 ஆண்டுகள் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு முறையானபாடசாலைக்கல்வி அளிக்கப்படுவதுடன் அதற்கு இணைந்த வகையில் தாபனத்தின் சுற்றாடலில் அழகு நிலை கற்கைகள், கைவினைப் பொருட்கள், விவசாயப் பயிற்சிகள், கேக் தயாரிப்புப் பாடநெறிகள், கலை, வாழ்க்கைத் திறன்கள் போன்ற பயிற்சித் திட்டங்களுக்கு குழந்தைகள் அனுப்பப்படுகிறார்கள்., அதன் மூலம் அவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, மன சமநிலையைப் பேணுதல் மற்றும் எதிர்கால இலக்குகளைமேம்படுத்துவதன்சரியான வாழ்க்கை முறையை அடைய உதவுகிறது.