உலக குழந்தைகள் தின கொண்டாட்டம் 2023.

*”கனவுகளுக்கு வழி கூறுங்கள்”*

2023 ஆம் ஆண்டு உலக சிறுவர் தினத்திற்கு இணைந்த வகையில், மேல் மாகாண சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில். தங்கியிருந்து பாதுகாப்பினைப் பெறும் பிள்ளைகளின் ஆக்கங்களை வெளிக்கொண்டு வருவதற்காக 2023.10.05 ஆந் திகதி மேல் மாகாண சபை கட்டடத்தின் நுழைவாயிலில் சிறுவர் கலை கைவினைப் பொருட்கள் மற்றும் வீதி நாடகங்களின் கண்காட்சி  ஒன்று  நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களத்தினால் நடத்தப்பட்டது.

மேல் மாகாண ஆளுநர் கௌரவ ஏயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க,  அவர்களின் தலைமையில் மேல் மாகாண தவிசாளர் சுனில் விஜேரத்ன, மேல் மாகாண பிரதம செயலாளர் பிரதீப் யசரத்ன, ஆளுநரின் செயலாளர் திரு.பி.சோமசிறி மற்றும் சுகாதார, உள்நாட்டு மருத்துவ, சமூக நலன், நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு, மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் கே. காமினி தர்மசேன அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றதுடன். மேலும் இக் கண்காட்சியில், மேல் மாகாண பிரதி பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன் மேல் மாகாண சிறுவர் அபிவிருத்தி நிலையங்களின் முகாமையாளர்கள் மற்றும் சிறுவர்களும் இக்கண்காட்சியில் கலந்துகொண்டனர்.